தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை துவக்கு விழா – மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு – விவசாய விளை பொருட்ளை ஏற்றுமதி செய்யாமல் இந்திய அரசாங்கம் தடுப்பதாக குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சின்ன ஆளேரஹள்ளி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்கிவிழா நடைபெற்றது. கண்ணையா மற்றும் வரதராசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் சிறப்புறை ஆற்றினார்.

கூட்டத்திற்கு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றிருந்தனர். மலர் சாகுபடி அதிகம் செய்யக்கூடிய இப்பகுதியில் மலர் ஏற்றுமதி மையம், மலர்களை பாதுகாக்க குளிரூட்டும் அறை, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், மலர்களை விற்பனைக்கு எடுத்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், திருவண்ணாமலையிலிருந்து, குள்ளம்பட்டி வழியாக காவேரிப்பட்டிணம் வரை பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், படேதலாவ் ஏரியிலிருந்து காட்டாகரம் ஏரி வரை வரக்கூடிய நீர்வழிப்பாதையை மேலும் நீடித்து சின்ன ஆலேரஹள்ளி ஏரி வரை தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் அவர்களிடம், இந்த ஆண்டு மாம்பூ 25 சதவீதம் மட்டுமே பூத்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பருவநிலை மாற்றம் காரணமாக மார்கழியில் மாம்பூக்கள் பூத்திருந்த நிலையில், தற்போது மாசி மாதத்தில் பூக்கத்துவங்குகின்றன. அளவுக்கு அதிகமான தேவையற்ற மருந்துகளை மரங்களுக்கு தெளிப்பது ஆகிய காரணங்களால் மாமரத்தில் பூக்கள் குறைந்த்தற்கான காரணம் என தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் இந்திய அரசாங்கம் தடுப்பதால்தான் விவசாயிகள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.

பேட்டி. இராமகவுண்டர் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *