கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நகர மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தொடங்கி வைத்தார்.

கூத்தாநல்லூர் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினாலும் கர்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய இட வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இதற்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என கூத்தாநல்லூர் பகுதி பொதுமக்கள் , வர்த்தகர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் 1, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைதொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா தெடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் S.V.பக்கிரிசாமி, நகராட்சி ஆணையர்
சித்ரா சோனியா,சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் டி.கே.தேவா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *