புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசியதாவது:–
என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன் சொன்ன எதையும் இதுவரை செய்யவில்லை. பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்று பிரதமர் மோடி சொன்னார். புதுச்சேரியின் கடனை தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் நிர்மாலா சீத்தாராமன் சொன்னார்.

மாநில சுயாட்சிக்கு வழிசெய்வோம் என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஆனால் சொன்னது எதுவும் நடக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் துறைமுகம் விரிவாக்கம், விமான நிலையம் விரிவாக்கம், சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது

தான் மிச்சம். இரயில்வே திட்டம் முடக்கம். இப்படி சொன்னது எதையுமே செய்யலை. மற்ற மாநிலங்களில் செய்வதையாவது இங்கு செய்யலாம். அண்டை மாநிலங்களில் பிரதமர் உடன் நின்று ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறார். ஆனால் புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லா மாநிலமாக ஆக்கி உள்ளது

தான் இந்த அரசின் சாதனை. ரேஷன் கடையை திறக்க துப்பு இல்லாத ஆட்சியாளர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் வெட்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசுக்கு மனசில்லை. புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி தொகை முறையாக திருப்பி கொடுப்பதில்லை. ஜிஎஸ்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி வஞ்சிக்கப்படுகிறது. வடநாட்டிற்கு தாராளமாக வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடும் நிலை இல்லை. அரசு வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. இப்படி எல்லா வகையிலும் தோல்வி கண்ட அரசாக இந்த அரசு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி பின்தங்கி உள்ளதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களே காரணம். வேலைவாய்ப்பில் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

கலைஞர் ஆட்சியில் 52 வயதில் கூட அரசு வேலை கிடைத்தது. ஆனால் புதுச்சேரியில் வேலையும் கொடுப்பதில்லை. வயது தளர்வும் அளிப்பதில்லை. கனவோடு படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்யும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றியத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்துவதாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஒன்றிய மோடி அரசின் மெகா ஊழலை தடுத்து நிறுத்தி உள்ளது.

பல சலுகைகள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கி, தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பாஜக பல ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கார்ப்பரேட்டுகளிடம் பெற்ற லஞ்ச பணத்தில் பல மாநிலங்களில ஆட்சி மாற்றத்தை பாஜக அரங்கேற்றியது. எம்எல்ஏ–க்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டனர்.

அதில் புதுச்சேரியும் ஒன்று. இதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து யார் யார் எவ்வளவு பணத்தை பத்திரமாக கொடுத்துள்ளனர் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். நீதித்துறையின் இந்த தீர்ப்பு ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்கும் சம்மட்டி அடியாகும். வேளாண் சட்டத்தை எதிர்த்து 13 மாதங்கள் தொடர்ந்து டெல்லியில் போராடி பல நூறு பேர் உயிர் தியாகம் செய்தும் பிரதமர் பேசவில்லை. பின்னர் பொய்யாக வாக்குறுதி அளித்து போராட்டம் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் ஓராண்டாகியும் சொன்னதை செய்யாததால் விவசாயிகள் இன்று மீண்டும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். ஒன்றிய அரசு என்னதால் இரும்புக்கரம் கொண்டு தடுத்தாலும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறும். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுக்க விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் நலன் சார்ந்த கட்சிகள் உள்ளன என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் ஒன்றிய அரசு எதிர்வரும் தேர்தலில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திக்கும். இப்படி எல்லா வகையிலும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்.

ஒன்றியத்தில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். இந்தியாவே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை வழிநடத்தும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் காட்டும் வேட்பாளரை வெற்றி பெற வைப்போம். யார் பெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் வெற்றி பெற கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *