திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் இருந்தது.

தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது நாம் படிக்கும் காலங்களில் பள்ளிகள் வாசலில் ஐஸ் விற்பார்கள் ஆனால் தற்போது ஐஸ் வுடன் கஞ்சா விற்கின்றார்கள்.

முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார் பள்ளி கல்லூரிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சாமனிய மக்களின் வருமானம் பறிபோகின்றது என்ற காரணத்திற்காக லாட்டரி விற்பனையை தடை செய்தார்.

டெல்டாவிற்கு உரிமையான காவேரி பிரச்சனையில் மேகதாதுவில் அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு திமுக அரசு கண்டனங்களை தெரிவிக்கவில்லை.

கல்லூரிகளை நாம் தந்தோம் அங்கு கஞ்சா விற்பனையை இவர்கள் செய்கின்றனர் என்று பேசினார்.

இந்த ஆர்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சிவராஜமாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், இளைஞர்மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் ஜெயபுவனேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வீ.சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி, மாணவர் அணி உள்பட பிற அணி மாவட்ட செயலாளர்கள், நகர,பேரூர் கழக செயலாளர்கள், திருவாரூர் மாவட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள், பிற அணி ஒன்றிய,நகர,பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டினை திருத்துறைப்பூண்டி நகர கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.
திருவாரூர் நகர மன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் நன்றி கூறினார். ஏராளமான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகழக தொண்டர்கள் பலர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *