கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை ஏழை எளிய மாற்றுத்திறனாளி மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா கொண்டாட்டம்-இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

            கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் ஏழை எளிய மாற்றுத்திறனாளி மக்களுடன் மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கோவை கரும்புகடை பூங்கா நகர் மஸ்ஜிதுல் பள்ளி வாசலில் (05-04-2024) நடைபெற்றது .      பாரத மாதா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர்  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு,ஆயில், சோப்பு,சப்பாத்தி மாவு, இயற்கை நூடுல்ஸ் உள்ளிட்ட அடிப்படை தேவையான அனைத்து மளிகைப்பொருட்களுடன் , இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி 86- வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.அஹமது கபீர் , ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் செய்தி தொடர்பாளர் திரு.அப்துல் ஹக்கீம் , இஸ்லாமிய புத்தக நிலைய தலைவர் திரு.ஜக்கிரியா , பூங்கா நகர் பள்ளி வாசல் தலைவர் திரு.அப்துல் அஜிஸ், சமூக சேவகர் திரு.அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சமூக சேவகர் திரு.பர்கத் பாஷா, K.G மருத்துவமனை மருத்துவர் திரு.சபரி சுரேஷ் அவர்களுக்கு மனித நேய பண்பாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.மேலும் இவ்விழாவில் செளரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க நலச்சங்கத்தை சார்ந்த திரு பாபு.M.கென்னடி, சகாயராஜ், தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ திரு.இஸ்மாயில் பாஷா, திரு.மெளலவி நிலாமுதின் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் பாரத மாதா அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,குணசேகரன்,தமிழரசன், இளங்கோ, ராஜேஷ், சரவணன், சுஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *