எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் வந்து மலர்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஆழிப்பேரலை என்கின்ற சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, .சுனாமி ஏற்பட்டு 21 ஆண்டுகளைக் கடந்தும் அதனுடைய பாதிப்புகளை மீனவர்கள் இதுவரை மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.
பலரது வாழ்க்கை நொடிபொழுதில் மாறிபோனது
இத்தகைய சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 21ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து நினைவுத் தூண் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக சென்று திருமுல்லைவாசல் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனிர்க்கு மலர்வளயங்கள் வைத்து மலர்கள் தூவினர் அதைத்தொடர்ந்து நினைவுத் தூண் அருகில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மலர்களைத் தூவினர் அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்
இதேபோல் பழையார்,வாணகிரி, கூழையார், தொடுவாய், பூம்புகார் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் பேரலையால் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் திமுக,அதிமுக,தாவெக,நாம் தமிழ் உள்ளிட்ட கட்சியினர் 10000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.