எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தனர்.
சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, துணைச் பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, இளைஞரணி துணைச் செயலாளர் பாலசேகர், நடராஜன்,மாவட்ட கழக செயலாளர்கள் பாஸ்கர், வில்லியம்ஸ், மதுரை வீரன்,விஜயன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் சுடலைமணி,பகுதி கழக செயலாளர் முத்துக்குமார்,ராஜேஷ், டேனிஷ் குமார், மற்றும் கழக நிர்வாகிகள் பெருமாள், மகளிர் அணி நிர்வாகிகள் ஆனந்தி, விஜயலட்சுமி கழக நிர்வாகிகள் பொதுமக்களுடன் கலந்து கொண்டனர்.