தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளநத்தம் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் முதல் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.

முதல் நாளான இன்று, தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் இதை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.50,000 பரிசுடன் சுழற்சி கோப்பை வழங்கப்படும். மேலும் இந்நிகழ்ச்சியில் நெப்போலியன் சிவப்பிரகாசம் பாண்டியன் பெரியசாமி வேலுச்சாமி ஊர் தலைவர் ரமேஷ் நடராஜன் மாயவன் உள்ளிட்ட

ஊர் பொதுமக்கள், கிரிக்கெட் வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போட்டியை கண்டுகளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *