தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமை வகித்தார். இதில் கீழவெண்மணியில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் உபரி நில அறிவிப்பு செய்து ஏழை மக்களுக்கு பட்டா வழங்கியும், நிலத்தை அளவீடு செய்து தராமல் 50 ஆண்டுகளாக தாமதம் செய்து வரும் அரசைக் கண்டித்தும், மேற்கண்ட பட்டா வழங்கிய நிலத்தை அளவீடு செய்து தர அதிகாரிகளை வலியுறுத்துவோம், என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன், தாராபுரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், குண்டடம் கிளைச் செயலாளர் தாமரைச் செல்வி, தமிழ்ப் புலிகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் முகிலரசன், சிபிஎம் கட்சியின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.