கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா 27 வது மாநாடு அக்கட்சியின் வால்பாறை தாலுகா செயலாளர் மோகன் தலைமையில் தாலுகா கமிட்டி உறுப்பினர் சி.அண்ணாத்துரை, எம். மணிகண்டன் எம்.ஜீவாகணேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது
இம் மாநாட்டில் வால்பாறை பகுதியில் சொந்த வீடு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா மூன்று சென்ட் நிலம் வழங்கவேண்டும், வால்பாறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும், வால்பாறை நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் போதுமான தெருவிளக்குகள் அமைக்கவேண்டும், மேலும் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும்,
வால்பாறை வால்பாறை பகுதி மக்களின் நலன் கருதி மனித வனவிலங்கு மோதலை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதோடு எதிர்பாராத வனவிலங்கு தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 15 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும், வால்பாறை சுற்றியுள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கு தெரு விளக்கு உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அதற்கான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கி வருவதாகவும் அக்கட்சியின் தாலுகா செயலாளர் மோகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்