கம்பம்,
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா 50 -வது பிறந்த .நாளையொட்டி நேற்று காலை அங்குள்ள கம்பராய பெருமாள் கோவிலில் ஜெகநாத் மிஸ்ரா குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் ஏராளமான இளைஞர் அணி நிர்வாகிகள் தார தப்பட்டை வானவேடிக்கை முழங்க
ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பார்ம கணேசன் தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன்,வியாபாரிகள் நலப்பிரிவு மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 50-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 50 கிலோ எடை கொண்ட பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் நமது மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர் உத்தமபாளையம் ,தேவாரம், , அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது.
ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை ,வழங்கப்பட்டதுசாலை விபத்தில் மரணம் அடைந்த வீரபுத்திரன் குடும்பத்தாருக்கு ரூ.1.லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இலவச மரக் கன்றுகளும், 500க்கும் மேற்பட்டோருக்கு விதைப் பந்துகளும் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ – மணவியர்களுக்கு பேக் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகள்,ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 5 ஆயிரத்து மேற்பட்டோருக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
விழாவில்,மாநில இளைஞரணி செயலாளர் மணி,கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர்,நகரச் செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர், இளைஞர் அணி துணைச் செயலாளர் அருண்குமார்,மாநிலமகளிர் அணி துணை அமைப்பாளர் லதா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.