வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

திண்டுக்கல் மலையடிவாரத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை 1 முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். மேலும் மாலை நேரங்களில் தினந்தோறும் ஐயப்ப சுவாமிகளின் பஜனை மற்றும் இரவு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

அன்னதானத்தை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்னதானத்திற்கான ஏற்பாட்டினை
சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் சந்தானகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள், குருசாமிகள், உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *