காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சித்தூர் மற்றும் எச்சூர் கிராமங்களில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி மற்றும் கோபால் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கலந்து கொண்டு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசி இந்த வாக்குசாவடிகளில் 100 சதவீதம் வாக்கு பெற வேண்டும் என மக்களிடையே எடுத்துரைத்தார் பிறகு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி என வாக்காளர்களிடம் உறுதி மொழி எடுக்க வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொடவூர் ரவி, குண்ணம் முருகன், டான்போஸ்கோ, சந்தவேலூர் சத்யா, சந்தவேலூர் வேண்டாமணி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்