திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, சுதந்திர போராட்ட வீரர், தியாக சீலர், தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் விழா தலைமை ஏற்று நூற்றாண்டு விழா கொடியினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் ஏற்றி வைத்தார்.
ஒன்றிய துணை செயலாளர்கள் கே.செல்வராஜ், வி.பாக்யராஜ், நகர செயலாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதந்திர போராட்ட வீரர், தியாக சீலர், தகைசால் தமிழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் 101- வது பிறந்த தினவிழா கேக் வெட்டி வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றையும், ஆர்.நல்லகண்ணு அவர்களின் தியாகங்களையும் பற்றியும் அதிமுக நகர செயலாளர் சா.குணசேகரன், திமுக முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பா.சிற்றரசு, சிபிஐ முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.உதயகுமார், காங்கிரஸ் கட்சி ஐஎன்டியுசி திருவாரூர் மாவட்ட தலைவர் வலஙகை குலாம் மைதீன், விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு, ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் சண்முகம் ஆகியோர் புகழுரையாற்றினார்கள்.
நிகழ்வில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரவி, பேராசிரியர் ஆறுமுகம், ஏஐஒய்எப் ஒன்றிய தலைவர் தமிழ் லெனின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கண்ணையன், எஸ்.பூசாந்திரம், கிளை செயலாளர்கள் பரமசிவம், அம்பிகாபதி, செல்வராஜ் மற்றும் கிளை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வு முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா அனைவருக்கும் நன்றி கூறினார்.