திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மாநகராட்சி மண்டலகுழு தலைவர் தி மு தனியரசு உள்ளிட்டோ மௌன அஞ்சலி செலுத்தி கடலில் பால் பாலூற்றி அஞ்சலி மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி திருவொற்றியூர் கே வி கே குப்பம் மற்றும் திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு காசிமேடு முதல் எண்ணூர் வரையிலுள்ள மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிர் தீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர் பல இடங்களில் உயிர்நீத்தவர்கள் புகைப்படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது

திமுக மாநில மீனவர் அணி சார்பில் சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிர் நீத்தவர்கள் நினைவாக மாநில மீனவர் அணி துணைத்தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் திருவொற்றியூர் கே.வி.கே குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு கடற்கரை வரை சென்று கடலில் பால் ஊற்றி பூ தூவி அஞ்சலி செலுத்தினர் அமைதி ஊர்வலத்தை திமுக துணைத் தலைவரும் தேர்தல் பொறுப்பாளர் ஆர்.ராசா எம்பி துவக்கி வைத்து 70 நபர்களுக்கு மீன்பிடி என்ஜின், 3000 பெண்களுக்கு அரிசி, 1000 பெண்களுக்கு மீன் விற்பனை செய்யும் அன்னகூடை பாத்திரம், 20 நபர்களுக்கு தையல் இயந்திரம், 20 நபர்களுக்கு சலவை பெட்டி, 1 மீனவருக்கு பைபர் படகு, 4 தள்ளு வண்டி, 4 மாணவர்களுக்கு மடிக்கணினி என 4500 பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ திருவொற்றியூர் பகுதி செயலாளர்கள் வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம்
வி.ராமநாதன், மாமன்ற உறுப்பினர்கள் கே பி சொக்கலிங்கம் வீ.கவி கணேசன் தலைமைக் கழக பேச்சாளர் கருணாநிதி ரா.முருகேசன், எம்.எஸ்.நாகலிங்கம், இ.ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


திருவொற்றியூர் குப்பத்தில் திமுக சார்பில் திமுக பகுதி செயலாளர் திமு தனியரசு தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று கடலில் பாலை ஊற்றி மலரஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சியில் ஆ ராசா எம்பி மாவட்ட செயலாளர் எம் எல் ஏ எம் எல் சரவணன் குமரேசன் எம் பி குமார் உட்பட பல கலந்து கொண்டனர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் திமுக பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் வை ம அருள் தாசன் தலைமையில் சுனாமியால்உயர்நீத்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி மலரஞ்சலி செலுத்தி ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆழிப்பேரலை சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தனர்.

சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, துணைச் பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி செயலாளர்கள் வில்லியம்ஸ், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *