மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை விழாக்கோலம் பூண்டது…. சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின:

மதுரை, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குவதால் மதுரை விழாக்கோலம் பூண்டது. இன்று இரவில் மீனாட்சி அம்மனுக்கு மதுரையின் அரசியாக பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான சித்திரை – திருவிழா கடந்த 12-ந் தேதி – கொடியேற்றத்துடன் தொடங்கியது.12-ந் தேதி முதல் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். விழாவில் 7-ம் நாளான நேற்று காலையில் பிச்சாடானார் கோலத்தில் சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், பிரியாவிடையுடனும், யாளி வாகனத்தில் மீனாட்சி அம்ம = னும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கியது. மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைப வம் 8-ம் நாள் விழாவாக இன்று இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் நடக்க இருக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங் கப்படும். தொடர்ந்து மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனி டம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி பட்டத்து அரசியாக 4 மாசி வீதி களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
9-ம் நாள் விழாவான நாளை சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவர்களை வென்று கடைசியாக இறைவனிடம் மீனாட்சி அம்மன் போர் புரியும் திக்கு விஜயம் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம் மன் திருக்கல்யாணம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *