உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு வீதிகள் வழியாக அசைந்து ஓடிய தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர்,இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார்.

இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60ம் ,80,100ஆம் வயது பூர்த்தி கல்யாணம்,ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.வருடத்தின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும். இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான 8 ஆம் நாள் திருத்தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் அம்பாள் சுவாமி தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு மாட வீதிகளையும் வளம் வந்தது முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது. சித்திரை தேர் திருவிழாவில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் நான்கு வீதிகள் வழியாக அசைந்து அசைந்து சென்றதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *