பிரதமர் மோடி மக்களுக்காக பேசுகிறார், ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செல்கிறார்-கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி…
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்து உள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்கு அளிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து இருக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்களுக்கு இந்த பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை சரி செய்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஒருவரின் வாக்களிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 10 கோடி நபர்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீதம் இஸ்லாமிய மக்கள் பயன் அடைந்து உள்ளனர்.

அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மக்கள் பலனடைந்து உள்ளனர். எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார்.

அதுவே காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார்.

இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை.இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது.

முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள நடவடிக்கை அவர் எடுக்கவில்லை. அதுவே பிரதமர் மோடி விஸா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்து உள்ளார்.

அலிகார் பல்கலைக் கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை. இப்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக் கூடாது என மோடி பேசி உள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *