கரூர் செய்தியாளர் மரியான் பாபு
ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழுகூட்டம்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கரூர் அருகே உள்ள ஆட்சிமங்கலம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் ஆ.மலைகொழுந்தன் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின் கரூர் மாவட்ட தலைவர் பாரதிதாசன்வாழ்த்துரை வழங்கினார் .
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்வி தகுதி அடிப்படையில்,அறிஞர் அண்ணாவால் அறிவித்து தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும்.
உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து பெண் ஆசிரியர்களுக்கும் வருடத்திற்கு 12 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் .
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய காப்பீட்டு திட்டத்தில் பெற்றோர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை எனவே உடனே அரசாணை வெளியிட வேண்டும்.பள்ளி விடுமுறை நாட்களில் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கு ஈடாக மற்றொரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்புகள் அனைத்து வகை தேர்வுகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் வினாத்தாளில் திருத்தம் கொண்டு வரும் வகையில், மற்ற 60க்கு 40 மதிப்பெண்கள் எனவும், 9 10 வகுப்பு மாணவர்கள் 70 க்கு 25 மதிப்பெண்கள் எனவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் மாணவர்களுக்கு 70க்கு 30 என்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகின்றனர் இதனை மாற்றம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்யாமல் அனைத்து பணி இடங்களையும் நிரந்தர முறையில் நியமனம் செய்ய வேண்டும்.2012 ஆண்டுக்கு முன்னர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் கொள்ளுவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிறைவாக, நிர்மலா வென்சி நன்றியுரை கூறினார்.தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டத்தின் போது, செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் மலைக்கொழுந்தன், போட்டா ஜியோ அமைப்பு சார்பில், நடைபெறும் டிசம்பர் 29 மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திலும், தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி தமிழகம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது.
சமீப காலமாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது அமைக்கப்பட்டு, குழு உண்மை தன்மையை உறுதி செய்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்யும் நிலை உருவாக வேண்டும்.17.12.2021 ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தமிழக அரசு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை சமரசமற்ற போராட்டங்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மேற்கொள்ள உள்ளது என தெரிவித்தார்.