கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை,பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் m c நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
முகாமிற்கு வருகை தந்த பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் mc அவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவங்கள் பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என்பதையும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது,தலைமையாசிரியர் தனலட்சுமி அரசு அலுவலர்கள், வார்டு செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் வை.இளங்கோ கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.