மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரி நடு ஏரி தற்போது ஊராட்சி சார்பில் அந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டு வருகிறது

அந்த ஏரியை அருகில் இருக்கும் பிரபல தொழிலதிபுரம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கவுன்சிலர் மாண எம் எஸ் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கடையின் பின்புறமாக உள்ள இடத்தில் ஏரியின் மண்ணை உயரமாக கொட்டி வருகிறார்கள்

இந்நிலையில் கடையின் பின்புறமாக உள்ள ஷட்டர் மேல் குளத்தில் வெட்டிய மண்களை உயரமாக கடையின் உள்ளே வெளியே போக முடியாத சூழ்நிலை உள்ளது மேலும் மழை பெய்தால் தண்ணீர் முழுவதுமாக கடையின் உள்ளே வருவதாக உள்ளது

இதனை அகற்றி கொடுக்க ஊராட்சி நிர்வாகம் மறுத்ததாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளரும் பிரபல தொழிலதிருமான எம் எஸ் கந்தசாமி அவர்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விடுதலை சிறுத்தை கட்சிய சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கடையை மூடிவிட்டு திடீர் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்

தகவல் அறிந்த மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்து உடனடியாக சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றனர் கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *