ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்ப பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்……..

சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட திருக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.
நேற்று காலை 8 மணிக்கு மேல் மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதே திருக்கோலத் துடன் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் சன்னதி முன்பிருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார்.

அழகரை வழியனுப்பி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இன்று மூன்றுமாவடி, பொய்கைகரைப்பட்டி, அப்பன் திருப்பதி வழியாக சென்று நாளை காலை 11 மணிக்கு
கள்ளழகர் இருப்பிடம் வந்து சேர்கிறார்.

ஏப்.28ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *