திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து விழுந்து உள்ளது
மேலும் அந்த பகுதியில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த நடை பாதையில் தான் சென்று வருகின்றனர். இதை சரி செய்ய கொடைக்கானல் வார்டு உறுப்பினரிடமும் மற்றும் நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொடைக்கானல் பாரதிய ஜனநாயக கட்சி சார்பாக கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து நகராட்சி முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.