கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
அதே வேளையில் அவர்களுக்கு தேவையான அரசு சாா்ந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடி ெதற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவரும் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்்பி பிறந்தநாளையொட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 51 கபடி வீரா்களுக்கு வடக்கு ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா விளையாட்டிற்கு தேவையான சீருடைகளை வழங்கி ஊக்குவித்தாா்.