இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்
வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது
சத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும்டிசிஎஸ் கம்பெனிகள் இணைந்து பெங்களுரில் எலக்ட்ரிக் வாகனகண்டுபிடிப்புக்கான ரீவ் போட்டியை நடத்தியது. இதில் இந்தியாமுழுவதும் இருந்து வந்திருந்த கல்லூரிகள் மற்றும்
பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டு பிடிப்பை சமர்ப்பித்தனர்.

இந்த போட்டில் பண்ணாரிஅம்மன் கல்லூரியைச் சேர்ந்த மனுபேக்சரிங் மற்றும்
பேப்ரிக்கேசன் லேப்பைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்துகொண்டு டைனமிக் பேஸ் பிரிவில் வடிவமைக்கப்பட்ட எலக்ரிக்வாகனத்தை சமர்ப்பித்தனர். ஜெனரல்மோட்டார்ஸ் மற்றும்டிசிஎஸ் கம்பெனி சேர்;த நடுவர்கள் பல்வேறு பிரிவுகளில்
ஆய்வு செய்தனர். பின் பெங்களுரில் நடைபெற்ற இறுதிபோட்டில் பண்ணாரிஅம்மன் கல்லூரிமாணவர்கள் வடிவமைத்த 90கி.மீ மைலேஜ் தரக்கூடிய ஜியூஸ் என்ற வாகனம் சிறந்த பெஸ்ட்பிரசன்டேசன் அவார்டு மற்றும் ரூபாய் 1.5 லட்சம்பரிசுதொகையுடன் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மேன் பாலசுப்பிரமனியம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்
பாராட்டினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *