நாமக்கல் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு வெடிவுபத்துக்கு காரணம்விடியற்காலை தன் குழந்தைக்கு பால் காய்ச்ச சமையல் எரிவாயு சிலிண்டர் அடுப்பை பத்த வைக்கும் போது இந்த அசம்பாவிதம் நடந்ததாக தகவல்

நாமக்கல் அருகே மோகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் தீப்பற்றி வெடித்து ஒரு ஆண் பெண் 4 பேர்கள் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ளது மேட்டு தெரு இந்த பகுதியில் பல ஆண்டு காலமாக நாட்டு பட்டாசு கடை நடத்தியவருபவர் தில்லைகுமார் இவர் அனுமதி இன்றியும் பாதுகாப்பு இல்லாத இடத்திலும் நாட்டு பட்டாசுகளையும் சாதாரண பட்டாசுகளையும் திருமணம் ,மற்றும் இறந்த நிகழ்வு , விழாக்களுக்கு வைத்து விற்பனை செய்து வந்ததுள்ளார்

இந்த நிலையில் புத்தாண்டு தினத்திற்காகவும் வருகிற பொங்கல் தினத்திற்காகவும் திருவிழா காரணத்திற்காகவும் 1 டன் அளவிலான நாட்டு பட்டாசு உற்பத்தி செய்து மோகனூரில் தன் வீட்டு அருகே குடோனில் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசு குடோன் தீ பிடித்து எறிந்து வெடித்து தீ சுவாலை மேலே எழுந்து சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த பக்கத்து வீட்டார்கள் சுதாகரித்துக் கொண்டு செல்வதற்குள் அருகே படுத்திருந்த தில்லை குமார் மற்றும் மனைவி பிரியா தில்லைகுமாரின் தாயார் செல்வி அதன் அருகே இருந்த மூதாட்டி பெரியக்காள் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. நாமக்கல், மற்றும் பரமத்தி பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை போராடி அனைத்தனர்.
பட்டாசு வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக மோகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தரன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. அந்த சுற்று வட்டார மக்கள் பாதுகாப்பாக சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு காலை உணவு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, வருவாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *