மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தின் 7வது மற்றும் 8 வது நடைமேடைகளில் சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இடிக்கும் பகுதியிலிருந்து பயணிகளை பாதுகாப்பதற் காகவும், தூசியைக் கட்டுப்படுத்த பச்சை வலைகளைத் தாங்குவதற்காகவும் தடுப்பு வேலிகள் அமைக்கப்
பட்டுள்ளன.

மதுரையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாட்டுத்தாவணி எம். ஜி. ஆர்.பஸ் நிலையத்தில் ரூ15 கோடி செலவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக 7வது மற்றும் 8வது நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இடிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற் கொள்வதற்காக இந்த இரண்டு நடைமேடைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. தூசியைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பச்சை வலைகள் பொருத்தப்
பட்டுள்ளன.

கட்டமைப்பின் வயது மற்றும் மோசமடைந்து வரும் நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த சீரமைப்புப் பணி நீண்ட காலமாகவே தேவைப்பட்டு வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். “இந்த நடைமேடை கட்டப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாகிறது, இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலும் செய்யப் பட வில்லை,” என்று நாகர்கோவிலுக்குப் பயணம் செய்யும் மதுரையைச் சேர்ந்த ஏசுராஜன் கூறினார். பழுதடைந்த வயரிங் மற்றும் இயங்காத விளக்குகள், கழிப்பிடங்கள் ஆகியவை தொடர்ச்சியான பிரச்சனைகளாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் சில இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இப்போது ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களுக்குப் பதிலாக மூடப்பட்ட நடைமேடைகளுக்கு அருகில் 5 வது 6வது நிறுத்தப்பட்டு வருகின்றன. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, 6வது நடைமேடைக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

7 மற்றும் 8 வது நடைமேடைகளின் சீரமைப்புப் பணிகள் மார்ச் மாதம் 2 வது வாரத்திற்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

“முழுத் திட்டமும் நிறைவடைய சுமார் 8 மாதங்கள் ஆகும். இதில் நவீன விளக்குகள், மேம்படுத்தப்பட்ட மின்வசதி மற்றும் பஸ் நிறுத்தங்களின் பராமரிப்பு ஆகியவை அடங்கும்,” என்றும் அவர் கூறினார் சீரமைப்புப் பணிகளின் போது அகற்றப்பட்ட பிளாட்பார கடை உரிமையாளர் களுக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. “பணிகள் முடிந்ததும், கடைகள் மீண்டும் அந்தந்த உரிமையாளர்
களிடம் ஒப்படைக்கப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *