முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் கே.காந்திராஜன் தலைமை வகித்தார் தாளாளர் வக்கீல் எஸ்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்..
முதல்வர் அட்லின் லீமா அனைவரையும் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, முதுகுளத்தூர் தாசில்தார் கோகுல்நாத், டிஎஸ்பி சண்முகம் பள்ளியின் ஆலோசகர் பத்மநாபன், முன்னாள் என்.சி.சி அலுவலர் எஸ். துரைபாண்டியன் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.