ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் திருமதி.கலைச்செல்வி மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமபந்தியில் துணை ஆட்சியர் திருமதி.தனலட்சுமி, திருப்பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் திரு.கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் திரு.கணேஷ்பாபு, வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர் த.விஜயகுமார், முன்னாள் அறங்காவலர் புண்ணியநாதன், ஊராட்சி துணைத் தலைவர் சிவா எத்திராஜ், ஒரகடம் காவல் ஆய்வாளர், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சமபந்தியில் உணவு சாப்பிட்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூட்டு வழிபாடு செய்தனர்.