மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருநாள் 10 தினங்களாக கொண்டாடப்படுவது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும் இந்நிலையில் பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் கோயில் தைப்பூசத் திருவிழா 23 1 2026 முதல் 1 2 2026 வரை பத்து தினங்களாக திருவிழா நடைபெற்று வருகிறது
இந்நிகழ்ச்சியில் இன்று ஏழாவது நாளாக முருகர் சண்முகர் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பண்பொழி தாருஸ்ஸலாம் ஜூம்மா பள்ளிவாசல் சார்பகா திருமலை கோயில் மூல உற்சவருக்கு சீர்வரிசை பொருட்களும் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஜமாத் நிர்வாகம் சார்பாக சர்பத் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது
இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் செயலாளர் முகமது இஸ்மாயில் பொருளாளர் நவாஸ்கான் துணைச் செயலாளர் முகமது கபீர் அப்துல்லாஹ் துணைத் தலைவர் ரசாக் தமுகவை சேர்ந்த சையத் அலி பண்பொழி தேவர் நாட்டாமை செந்தூர் ரவி இளைஞர் அணி நிர்வாகிகள் நாகராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருமலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம்.உதவி ஆணையர் செயல் அலுவலர் கோமதி வழிகாட்டுதலின்படி அறங்காவலர் குழு உறுப்பினர் பண்பொழி M.S.இசக்கி பாப்பா தலைமையில் தலைமை எழுத்தர் அ.லட்சுமணன் திருக்கோவில் அர்ச்சகர்கள் S.திருமேனி நாதன் ரமேஷ் V.வீரபாகு பட்டர் மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் ஏழாம் திருநாள் மண்டக படித்தாரர்கள் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் அச்சம் புதூர் காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஊர் காவல் படையினர் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .