கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான கணக்கை பராமரிக்காத மருத்துவ அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை…
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை. அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு, நோயாளிகளின் விவரம் உள்ளிட்ட விவரங்களை மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.
அப்போது மருந்துகளின் இருப்பு குறைவாக இருப்பதைக் கணக்கிட்டு, அதனை குறித்து வைக்காத செவிலியர்களை எச்சரித்தார் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை. மருந்துகளின் இருப்பை குறித்து கணக்கெடுக்காத செவிலியர்களை தலைமை மருத்துவர் தான் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத மருத்துவரான உங்களை சஸ்பெண்ட் செய்யலாமா என கேட்டு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இதுபோன்று மீண்டும் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்
இந்த ஆய்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.