தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல்
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து தனக்கு கிடைத்த தியான அனுபவத்தால் திருவண்ணாமலையில் வெட்டவெளி இருப்பிடம் என்னும் அறக்கட்டளை நிறுவி, அதில், தியான இருப்பிடத்தையும், அன்னதானக்கூடத்தையும் நடத்தி வரும் வெட்டவெளி இருப்பிட குரு, உலகம் முழுவதும் தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரையாற்றி வருகிறார்..
திருவண்ணாமலையில் தினமும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும்,இவர் தமிழகம் மட்டுமின்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தியான உணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் யாம் ஒன்றுமில்லை என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் கட்டணம் வாங்கியதில்லை. விருப்பமுள்ள மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து, திருவண்ணாமலையில் தினந்தோறும் அன்னதானம், ‘வெட்டவெளி இருப்பிடம்’ என்ற அறக்கட்டளைக்கு அவர்கள் செலுத்துகிறார்கள். இதுவரை 700க்கும் மேற்பட்ட வகுப்புகளை தமிழ்நாடு, கர்நாடகா, மலேசியா என பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் கோவை வந்த வெட்ட வெளி இருப்பிட குரு பேரூர் பகுதியில் யாம் ஒன்றுமில்லை எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆன்மீகத்தை கடந்து தியானம் செய்வதால் மனிதன் அடையும் பேரின்பம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்..
இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள், மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டிஜிட்டல் உலகில் மனிதர்கள் தங்களது திறன்களை அறியாமல் இயங்கி வருவதாக தெரிவித்த அவர்,தியானம் செய்வதால் ஏற்படும் உணர்வுகளை மனிதர்கள் புரிந்து கொண்டால்,அதை விட பேரின்பம் உலகில் இல்லை என தெரிவித்தார்…
ஆன்மீக அனுபவங்களை தாண்டி தியானம் செய்வதை ஒரு பயிற்சியாக செய்யாமல் தேடி வரும் உணர்வுகளை மனிதர்கள் சரிவர பயன்படுத்தாமல் தவற விடுவதாக கூறிய அவர்,தியான உணர்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே யாம் ஒன்றுமில்லை எனும் தமது பயணத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்…