கடலூர்,மாவட்டம்
வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் 48வது அகில இந்திய சித்த வைத்திய மாநாடு நடைபெற்றது. பொது செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர்பாஸ்கரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மாநாட்டில் பாரத ஜனதா கட்சி மாநில செயலாளர் வக்கில் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு பேசினார்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் “பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (RSNP) ஆர் எஸ் என் பி சான்றிதழை மீண்டும் வழங்க வேண்டும். அதற்கான மனுவை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
பாரம்பரிய சித்த வைத்தியர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்வேண்டும்,என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞானசரவணவேல், மற்றும் இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன் ,மிஷன் இந்தியா பொறுப்பாளர்கள் எஸ் வி பிள்ளை மற்றும் வாசுதேவன் உட்பட கலந்து கொண்டு பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டுமென பேசினார்கள்.
மாவட்டதலைவர் ராமர்,சிதம்பரம் இளங்கோவன், ரூமி ராஜசேகரன், மற்றும்
சுஷான்லிரவி, மாரிசங்கரி, ராஜமோகன், தனசேகர், குமாரசெல்வன், அன்பழகன் மற்றும் தமிழகத்திலிருந்து மாவட்ட சித்த வைத்தியர் சங்கங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் பரம்பரை சித்தர்கள் மூன்றுஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.