திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிட் பிரைன் மனநல மையம் & மலர் கிளினிகல் லேப் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் விழிப்புணர்வு முகாமை நடத்தினர். மைய நிர்வாகி இரா.பாஸ்கரன் வரவேற்றார். லேப் நிர்வாகி மலர் சாதிக் தலைமை தாங்கினார்.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் மற்றும் ரெயின்கோட் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் பங்கேற்று தூய்மை பணியாளர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சோனியா, நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் சி.ஆர். பெருமாள், முன்னாள் நகர செயலாளர் அன்சாரி, எக்ஸ்னோரா கிளை தலைவர் ரயில்வே தனசேகரன், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இறுதியில் மனோஜ் குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.