அரியலூரில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி வருகிற வெள்ளிக்கிழமை ஒற்றுமை பேரணி பிரம்மாண்ட அளவில் நடைபெறுவதாக மத்திய அரசின் மைபாரத் இயக்கத்தின் இளையோர் அலுவலர் கீர்த்தனா செய்தியாளர்களிடம் கூறினார்
இது குறித்து அவர் கூறியதாவது இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலில் 150வது பிறந்த நாளை இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் மூலம் நாடு முழுவதும் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது
இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் அரியலூரை அடுத்துள்ள வீ கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நவம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை பேரணி நடைபெறுகிறது
பேரணியானது வீ கைகாட்டியில் தொடங்கி புதுப்பாளையம் வரை 7 கிலோமீட்டர் தொலைவிற்கு யாத்திரை நடைபெறுகிறது இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் மன்றத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார் பேட்டியின்போது அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் நெல்லியாண்டவர் கல்லூரி துணை முதல்வர் கயல்விழி ஆகியோர் உடன் இருந்தனர்