வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பொியசாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தின்படி (எஸ்.ஐ.ஆர்.) நமது வாக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர்கள் புதியதாக உரிய படிவத்தில் எழுதிக் கொடுத்தால் தான் வாக்கு பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்படும். ஆகவே நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களை உரிய விண்ணப்பங்களை நிரப்பி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அரசு தரும் படிவத்தை பாக அலுவலர்கள் அதாவது பிஎல்ஓ வீடு வீடாக அந்த படிவத்தை கொண்டு வருவார்கள். அந்த படிவத்தில் 2024 எம்.பி தேர்தலில் வாக்களித்த பாகத்தில் உங்களது பெயர், முகவரி, போட்டோ ஆகிய விவரங்கள் அந்த படிவத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். அதனை பெற்று அதில் இப்போது உள்ள புகை படத்தையும், உங்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ்யையும் இணைத்து வழங்க வேண்டும். புதிய ஓட்டு அதாவது 1.1.2026ல் 18 வயது முடியும் புதிய வாக்காளர்களை சேர்த்திட மற்றும் பழைய ஓட்டுகளையும் சேர்த்திட என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி படிவம் உள்ளது. அதை பெற்று பதிவு செய்தால் தான் நமக்கு ஓட்டுரிமை கிடைக்கும். ஓட்டு போட முடியும் எனவே யாரும் அலட்சியமாக இருந்து விடாமல் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். இப்போது பதிவு செய்தால் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் ஆகவே திமுகவினா் அனைவரும் விழிப்புணா்போடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆபிரகாம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் வட்டச் செயலாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், உள்பட பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *