காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் முதல் வண்டலூர் வரை 30 கிமீ தொலைவிற்கு
மாநில நெடுஞ்சாலையானது அமைந்துள்ளது. இந்த சாலையானது, GST சாலை, ஒரகடம் , செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் கனரக வாகனங்கள் சென்று வர முக்கியசாலையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பருவ மழையின் கடுமையாக வண்டலூர் வாலாஜாபாத் சாலை சேதம் அடைந்ததை தொடர்ந்து, தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, உயரதிகாரிகள் ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் உக்கோட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் சாலையை சீரமைத்து வருகிறார்கள்.
முதற்கட்டமாக ஒரகடம், கண்டிகை, வாரணவாசி ஆகிய பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை துறையினர் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த வண்டலூர் வாலாஜாபாத் சாலை முழுவதும் சீரமைக்ககப்படும் என தெரிவித்துள்ளனர்.