விருத்தாச்சலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின், அன்னவலி பகுதியில் சாலையின் இருபுறமும் சரியான முறையில் வேகத்தடை இல்லாததும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் அமைக்காததும், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல்,தொடரும் சாலை விபத்துகளால், பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தேசிய நெடுஞ்சாலை துறையின் இவ்வலட்சியப் போக்கை கண்டித்து, நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட பொறுப்பாளர்களுக்கு இச்சிக்கலை ,விளக்க,கடலூர் மாவட்டம் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதி, நாம் தமிழர் கட்சியின்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
அருள் சின்னப்பராஜ் ,சுமதி சீனிவாசன் ,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி . ஜேசுதாஸ், சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர்,ஜேசுதாஸ்,வீர தமிழர் முன்னணி சபாநாயகம், ஆரோக்கியதாஸ் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைச் செயலாளர்ஆரோக்கியதாஸ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், அதிகாரிகள் சந்தித்து பேசியதன்பேரில் இக்குறைபாடுகளை இன்னும் ஓரிரு தினங்களில் சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.