கூடலூரில் திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டியை துவக்கி வைத்த திருச்சி சிவா எம்பி
தேனி மாவட்டம் கூடலூரில் திமுக மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினரும் முன்னாள் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளருமான எம்.ஜெயக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மாநில அளவிலான தமிழ் இளைஞர்களின் வீர விளையாட்டான கபடி போட்டியினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா போட்டியினைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் கமம் சட்டமன்ற உறுப்பினருமான பண்பாளர் கம்பம் என். ராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் உள்பட நகர திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.