பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெற வாய்ப்பு

வி.ஜி.விளம்பரம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது்.

பிப்ரவரி 13 மற்றும் 14 ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா வில்,ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பொது மேலாளர் (நெட்வொர்க் – 3) சித்தபட்டுலா ஹரிதா பூர்ணிமா கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்…

இதில் பிரபல நடிகை சுஜிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்..
விழாவில் ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா வங்கியின் துணைப் பொது மேலாளர் (B & O) அருண் அனைவரையும் வரவேற்று பேசினார்..

காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன…

100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு புராஜெக்டுகள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் 5 லட்சம் முதல் 10 கோடி வரையிலான சொத்துக்களை இங்கு வாங்க முடியும். மேலும் அப்பார்ட்மென்ட்டுகள், வில்லாக்கள், பங்களாக்கள். மனையிடங்கள் மற்றும் உடனே குடியேறுவதற்கு ஏற்ற வீடுகள் விற்பனை செய்யும் முன்னனி நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளனர்..

இது குறித்து ,கண்காட்சியின் மெயின் ஸ்பான்சரான தியா ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீராம் கூறுகையில்,கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கோவக வாழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தியா நிறுவனம் பல்வேறு புதிய புராஜக்டுகளை துவக்க இருப்பதாகவும் அதற்கான பதிவுகளும் இங்கு நடப்பதாகவும்,சிறப்பு சலுகைகளும் வழங்குவதாக தெரிவித்தார்…

ஸ்பாட் புக்கிங் சலுகையாக இக்கண்காட்சியில் iPhone, E-Bike. ரொக்க தள்ளுபடி, தங்க நாணயங்கள்உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை பெறலாம்.

இதே போல பல்வேறு முன்னணி கார் டீலர்களை உள்ளடக்கிய கார் மேளா கண்காட்சியும் இங்கு நடைபெறுகிறது. நவீன மாடல் கார்கள். மின்சார கார்கள் உள்ளிட்ட அனைத்து கார்களையும் சிறப்பு சலுகைகளுடன் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *