தூத்துக்குடி மாநகர், 42 வது வார்டு பகுதியில் சிவந்தாகுளம் ரோட்டில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்..

அப்போது அவர் பேசும் போது, 2021இல் இருந்து நான்கரை ஆண்டு காலமாக பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் மட்டும் 784 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. குடிநீர் வசதி, பூங்காக்கள், நகர் நல மையங்கள், ரேஷன் கடைகள், பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் கட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் என அனைத்து திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கின்றார்.. இன்று அனைத்து பெண்களுக்கும் 5000 பணம் ஏறி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் அடிமை ஆட்சியான அதிமுக வழக்கு போட்டு மகளிர் தொகை கொடுக்க விடாமல் தடுக்க சூழ்ச்சி செய்தார்கள்.. எதிரி சூழ்ச்சி அறிந்து முதலமைச்சர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்குண்டான 3000 சேர்த்து 2000 கோடை காலம் என 5000 கொடுத்திருக்கின்றார்.. ஆட்சிக்கு மீண்டும் வரும்போது மகளிர் உரிமைக்காக 2000 உயர்த்தி வழங்குவேன் என்றும் கூறியிருக்கின்றார்.

மகளிர் உரிமைத் தொகை கொடுக்க முடியாது என்று கேலி செய்தார்கள். அவர்கள் மீது கரியை பூசி இன்று பணம் கொடுத்திருக்கின்றார்.. கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக 4,000 ரூபாய் கொடுத்தார்.. கல்வி, தொழில், பொருளாதாரம், வளர்ச்சி அனைத்திலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது. ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படுகிறது என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *