தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும் அதற்கு ஒத்துழைக்கும் அண்ணா .தி.மு.க.வையும் கண்டித்து தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அறிவுறுத்தலின்படி நகரச் செயலாளர்கள் வடக்கு சூர்யா பாலமுருகன் தெற்கு எம்.சி. பாண்டியன் நாராயண பாண்டியன் ஆகியோர் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சிப்பதையும் கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாநில மத்திய அரசு மானியத்தை குறைத்து மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்