திருவாரூர்., பிப்.16
தமிழகஅரசு கலைபண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளை நடத்தினர்.
இதில் ஐந்து வயது முதல் 16 வயது வரை மாணவ , மாணவியர்கள் 3 பிரிவுகளாக பரதம், நாட்டுப்புற நடனம் ,குரலிசை , ஒவியம் உள்ளிட்ட போட்டிகள் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உலக ஓவியதினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் திருவாரூர் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 400 க்கும் மேற்ப்பட்ட மாணவ,மாணவியர்கள் பெற்றோர்களுடன் வருகைதந்து ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று இடம் பிடித்த மாணவ,மாணவிகள் மாநில அளவில் நடைப்பெறும் கலைப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ , மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை
கலைப்பண்பாட்டு துறை தஞ்சை மண்டல உதவி இயக்குனர் ராஜாராமன் வழங்கினார்.
இதில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உதவியாளர் வடிவேல் , சவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலர்கள் யோகானந்தம் , ஈஸ்வரன், சக்திவேல், அசோக், மிதுன் மற்றும் நடுவர்கள் மோகனாம்பாள்,கவியரசி, மதியழகன், ரோஸி,வீரமணி,முருகனந்தம்,சங்கீதா,சத்தியா பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.