தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் அவர்கள் விழாவை நடத்தி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து ஆசீர்வதித்தார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சரும் நிர்வாகிகளும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலம், சத்தான உணவு, மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அரசு வழங்கும் தாய்மை நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

இந்த சமூக வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள், இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதில் தலைமை பொது குழு உறுப்பினர் K. S. கருணாகரன், மாவட்ட விவசாய அணி தலைவர் ஈஸ்வரன், அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் மயிலசாமி, கழக நிர்வாகிகளான குமரவேல், விஸ்வநாதன், ராணா பத்மநாபன், நாகராஜ், மகேஷ், சின்னதுரை, குணசேகரன் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *