சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரஞ்சித்சிங் கலோன் உத்தரவின்
பேரில் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் வழிகாட்டுதலில், நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் மேற்பார்வை யில் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் சாயல்குடி இருவேலி கண்மாய்கரை உள்வாயிலில்
2 ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார். இதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் என்.எஸ். எஸ் அலகுகள் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மேற்பார்வை
யில்அந்தந்த பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.