தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் இங்குள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சிக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை தாங்கினார் போடிநாயக்கனூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் தட்டு மஞ்சள் குங்குமம் கிழங்கு கண்ணாடி வளையல் வெற்றிலை பாக்கு பழம் போன்ற மங்களகரமான பொருட்கள் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டது மேலும் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் புளி சாதம் காய்கறி கூட்டு உள்ளிட்ட 7 வகை அறுசுவை சைவ உணவு வகைகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனது கையால் சிறப்பாக விருந்து அளித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தாய்மார்களும் தீர்க்க சுமங்கலியாக சுகப்பிரசவம் அடைந்து நூறாண்டு காலம் வாழ வேண்டும் என ஆசிர்வதித்து அர்ச்சனைகள் செய்து மனதார வாழ்த்தினார்
தாயுள்ளம் கொண்ட தேனி எம்பி .இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகரமன்ற கவுன்சிலரும் வடக்கு மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.