திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுனர்.
இந்த நிகழ்ச்சியில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மீனவர்களுக்கு வலைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்.
தமிழக முதல்வர் மகளிர்களுக்கு கொடுத்துள்ள 5000 ரூபாய் ஒரு கண்துடைப்பு தேர்தல் அரசியல் வாக்கு வங்கிக்காக இதை கொடுத்துள்ளார் இதனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் 2021 இல் ஆட்சி வருவதற்கு முன்பு ஆயிரம் ரூபாய் தருவேன் என்று கூறியிருந்தார் பாராளுமன்ற தேர்தல் வரும் வரை கொடுக்கவில்லை தேர்தல் வரும் போது தான் கொடுத்தார் அது வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள் பொங்கல் தினத்தன்று ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்

இதேபோன்று கடந்த மூன்று பொங்கலுக்கும் தரவில்லை தேர்தல் வரும்போது மட்டும் ஏமாற்றுவதற்கான ஒரு திட்டம் வைத்துள்ளார் அதே போன்று கோடை காலத்திற்காக ஆயிரம் ரூபாய் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் தராத ஒரு திட்டத்தை தமிழக முதல்வர் கொடுத்து இருக்கிறார் கொடுத்ததில் தப்பில்லை எனவும் போன வருடம் மற்றும் அதற்கு முந்திய ஆண்டு ஏன் கொடுக்கவில்லை தேர்தல் வரும் போது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு திட்டம். தமிழகத்தில் போதை கஞ்சா புத்தகத்தை எடுக்கும் மாணவர்கள் கஞ்சாவை கையில் எடுத்துள்ளனர்

பெண்கள் குழந்தைகள் பெண் குழந்தைகள் மது அருந்துகிறார்கள் இது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டு இருக்கிறது மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கிறது பத்தரை லட்சம் கோடி கடன் வைத்துள்ளார்கள் இந்தியாவில் 2011 காட்டிலும் ஐந்தரை லட்சம் கோடி கடனை வாங்கி தமிழ்நாடு கடங்கார மாநிலமாக இந்தியாவிலேயே முதல் கடங்காரன் மாநிலமாக மாற்றியுள்ளார்கள் இந்தியாவில் தமிழ்நாடு தான் கடன் வாங்கும் மாநிலம் இந்தியா தான் என்று மாற்றியுள்ளனர்

போதை பொருட்களில் முதல் மாநிலமாக இருப்பது நமது தமிழ்நாடு தான் தற்கொலைகள், கடன் போதை அதிகமாக நடைபெறுவதும் நமது தமிழ் நாடு தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மோசமான ஆட்சி சட்டம் ஒழுங்கு சரியில்லை இந்த சூழ்நிலையில் 5000 ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டுமென நினைக்கிறார்கள் வடிவுடையம்மன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்,
இதுவரை 18 கமிஷனை போட்டிருக்கிறார்கள்


கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது ஆளுநருக்கு அதிகாரம் வேண்டும் என்று சொன்னார் ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் வேண்டாம் என்று சொல்கிறார் தேவைப்பட்டால் வேண்டும் என்றும் தேவை இல்லை என்றால் வேண்டாம் என்றும் தமிழகத்தில் ஆளுநர் இல்லாத அரசாங்கம் வேண்டும் என்று கேட்கிறார்கள் அதையெல்லாம் இவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் 15 வருடங்களாக இருந்தபோது செய்து இருக்கலாம் அதையெல்லாம் செய்ய தவறி விட்டார்கள் நீட்டை கொண்டு வருவேன் என்று சொன்னார்கள் நீட்டை தவற விட்டார்கள் தெரிந்திருந்தே பொய் சொல்லி தான் இவர்கள் ஆட்சியை பிடித்தார்கள் என திமுகவை கடுமையாக குற்றச்சாட்டு உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *