பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது
கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர் . ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அய்யாத்துரை மகன் பாலகணபதி (52) இவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராக உள்ளார்
இந்நிலையில் கமுதியை அடுத்துள்ள ஆனையூர் பகுதியில் சென்னையைச்சேர்ந்த தனியார் மனை வணிக ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுப்பதில் இவருக்கும் இலுப்பைகுளம் கிராமத்தைச்சேர்ந்த கிழவன் மகன் முத்துமீராக்கும் (46) முன்பகை இருந்துள்ளது
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகணபதி வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது பத்திரபதிவு அலுவகம் அருகே காரில் வந்த முத்துமீரா உட்பட 7பேர்கும்பல் இறங்கி பாலகணபதியை கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்
இதில் பலத்தகாயமடைந்த பாலகணபதி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதுகுறித்து பாலகணபதி கமுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார் இதனடிப்படையில் முத்துமீரா (46) ஆதனக்குறிச்சியை சேர்ந்த கண்ணதாசன் (31) காணிக்கூரை சேர்ந்த ராஜேஸ் (31) இலுப்பகுளத்தைச் சேர்ந்த முத்து சூர்யக்குமார் (32) முத்துராமலிங்கம் (41) சின்ன மணக்குளத்தை சேர்ந்த லட்சுமணன் (44) மருதங்கநல்லூரை சேர்ந்த திருமுருகன் (48) உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்