தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழியியல் துறை நடத்தும் முதுமுனைவர்
வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்.தமிழ்ப் பல்கலைக்கழகம்,பொறுப்புக்குழு உறுப்பினர், துணைவேந்தர் பெ.பாரதஜோதி தலைமை வகித்து பேசியதாவது:”மறைந்த தமிழ் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பணியாற்றியவர். தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழை முன்னிறுத்தி பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர். அவரது இழப்பு தமிழுக்கும், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பேரிழப்பாகும் என்றார்.

சிறப்பு விருந்தினராக அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, தலைவர் முனைவர் இரா.இந்து, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தலைவர் முனைவர். பவானி, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தலைவர் முனைவர் ச.கவிதா, அயல்நாட்டுத்தமிழ்க்கல்வித்துறை இணைப்பேராசிரியர் முனைவர். தெ.வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் வாழ்வும் மற்றும் தமிழ்ப்பணி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.

முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் மொழியியல் துறை. தலைவர்
முனைவர் ப. மங்கையற்கரசி வரவேற்றார். நிறைவில் உதவிப் பேராசிரியர் முனைவர் மா.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *