C K RAJAN Cuddalore District Reporter..
9488 71235…

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டம் பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம், பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் பயன்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியினை பயில வேண்டும் என்பதற்காகவும், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் l மாணவர்கள் உயர்தரமான கல்வியினை பாதுகாப்பான சூழலில் மனதிற்கினிய வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கிலும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கூடுதல் இடவசதிகளுடன் கல்வி கற்றிடும் பொருட்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.


அந்த வகையில், பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறை, 1 அறிவியல் ஆய்வகம் மற்றும் இரண்டு கழிப்பறை கட்டடம் என தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளங்களுடன் சுமார் 703.50 ச.மீ பரப்பளவில் 500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டடம்) சிவசங்கர நாயகி,மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *